பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் குழந்தைகள் வடிவில் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது போன்று உருவாக்கப்பட்ட AI வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்கள் தொடங்கி சாமான்யப் பொதுமக்கள் வரைப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் பலர்க் குழந்தைகள் வடிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது போன்று உருவாக்கப்பட்ட AI வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த வீடியோவில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ரஷ்யாவின் புடின், அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், சீனாவின் ஜி ஜின்பிங், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஆகியோர் குழந்தை வடிவில் தோன்றி வாழ்த்து கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வீடியோ, மிக அழகானது எனவும், ரசிக்கும்படியாக இருந்தது என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.