நாட்றம்பள்ளி அருகே தனியார் நிறுவனத்தின் தின்பண்டத்தின் பாக்கெட்டில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள தேநீர் கடையில் ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட 4 பாக்கெட் குர்குரேவை வாங்கியுள்ளனர்.
அதில், ஒரு பாக்கெட்டில் இறந்த நிலையில் எலி கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து, தேநீர் கடைக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.
இது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் கூறுகிறோம் எனக் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
இதனால், செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் எலி இறந்து கிடந்தது குறித்த விழிப்புணர்வு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், குழந்தைகள் சாப்பிடும் பொருட்களை அஜாக்கிரதையாக பாக்கெட் செய்யக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.