ஜமைகாவின் மான்டேகோ விரிகுடாவில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும் சில வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.