சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணியின்போது கட்டடங்கள் பூமிக்குள் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேடு பஜனை கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரவு நேரத்தில், ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது திடீரென அருகில் உள்ள இரண்டு கட்டடங்கள் பூமிக்குள் இறங்கியது.
இதனால் கட்டடத்தில் உள்ள இரும்பு கேட் மற்றும் கான்கிரீட் அமைப்புகள் உடைந்து சேதமானது. தொடர்ந்து கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் அருகில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.