ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்ததற்காக 16 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டும் எனப் பாகிஸ்தான் அணியை ஐசிசி எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாக கூறி, அவரை நீக்கும் வரை போட்டியை புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் கூறியது.
இதனையடுத்து ஐசிசி மற்றும் ஏசிசி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான் விளையாட ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் நடந்தது பேச்சுவார்த்தை அல்ல, பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது போட்டியை புறக்கணிப்பதாக இருந்தால் பாகிஸ்தான் 16 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், விமானம் ஏறி சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்ல வேண்டும் எனவும் ஐசிசி எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.