அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயரமுடைய அதிபர் டிரம்பின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்ஸிக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்கும் விதமகாவும், அவரை கவுரவிக்கும் விதமாகவும் வாஷிங்கடனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது.
கிரிப்டோ கரண்ஸி சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலை 12 அடி உயரத்தில் தங்க நிறத்தில் காட்சியளிக்கிறது. கையில் பிட் காயினை ஏந்திய படி நிறுவப்பட்ட டிரம்பின் சிலையை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















