வாக்காளர் வரைவு பட்டியல் தொடர்பாக ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என விளக்கமளித்துள்ளது.
மேலும், ராகுல்காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.