உத்தராகண்டில் பேரிடர் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற பாஜக எம்.பி. நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பேரிடர் பாதிப்புகளை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது நெடுஞ்சாலையில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்த அனில் பலுனி, பேரிடர் நேரத்தில், NDRF-SDRF வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.