சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தால் கால் முறிவு ஏற்பட்ட சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
சிறுவனுக்குக் காலில் பிளேட் வைப்பதற்கான உபகரணங்களை வாங்குவதற்காக 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மருத்துவமனை ஊழியரான பழனி என்பவர் கேட்டுள்ளார்.
இதற்காக அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவரிடம், அவர் செல்போனில் பேசும் வீடியோ வெளியான நிலையில், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.