பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் பரிசாகப் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கிய கடம்ப மரக்கன்றை, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி நட்டுவைத்தார்.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை ஒட்டி உலகத் தலைவர்கள், நம் நாட்டு தலைவர்கள் பொது மக்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், பலர் பரிசுகள் வழங்கினர். அதில் குறிப்பாகப் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நட்டு வைத்தார்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரால் மரக்கன்று நடுங்கள் என்ற இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்தப் பரிசை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.