அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பர் கேன்யன் ஆற்றின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் சாலைகள் மொத்தமும் மூடப்பட்டதால், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் அங்குள்ள தேசிய வானிலை ஆய்வு நிறுவனம், அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.