மைசூரு தசராவுக்குப் பானு முஷ்டாக் பங்கேற்கக் கர்நாடக அரசு அழைத்ததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா மஹோத்சவத்தைப் புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் எனக் கர்நாடக அரசு அறிவித்தது.
இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைக் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை உள்ளடக்கிய அரசியலமைப்பின் முகவுரையைப் படித்துள்ளீர்களா எனக் கேள்வி எழுப்பினார். தொடந்து, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி விக்ரம் நாத் உத்தரவிட்டார்.