தமிழகத்தில் ஏழைகள், விளிம்பு நிலை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடும்போது, மாநில அரசு நடத்தும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மட்டும் தொடர் சரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சரிவு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் அடிப்படையில் தங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக அரசு கல்வி நிறுவனங்களை நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் தரமான கல்வி கிடைக்காத பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.