டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற ஏபிவிபி வேட்பாளர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஆர்யன் மான் 28,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
என்எஸ்யூஐ வேட்பாளர் ஜோஸ்லின் தமிம் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்
அமைப்பு தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளையும் ஏபிவிபி வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற ஏபிவிபி அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ABVP யின் தொலைநோக்குப் பார்வையில் GEN Z இன் நம்பிக்கையை இந்த மகத்தான தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.