அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிவகங்கையில் 205 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சுற்றுவட்ட சாலை பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் விவசாயிகள் இடையேயான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் குழு தலைவர் காந்தி ராஜன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விவசாயிகள், முல்லைப்பெரியார் கால்வாய் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வருவது இல்லை எனவும், விவசாய பணிக்காக இலவச மின் இணைப்பு பெறுவதற்கு பத்து ஆண்டுகள் காத்திருந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இயற்கை விவசாயம் செய்திட கரம்பை, வண்டல் மண் எடுக்க அரசு அதிகாரிகள் கடுமையான கெடுபிடிகள் விகுற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் உள்ள கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.