திண்டுக்கலில் முதல் முறையாக தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடங்கியுள்ளது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், பணத்தாள்கள், பழமையான பொருட்கள், அஞ்சல் தலைகள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வருங்கால தலைமுறையினருக்கு பழங்கால நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.