பாகிஸ்தானைத் தாக்க நள்ளிரவு 1 முதல் 1.30 மணி வரையிலான நேரத்தை தேர்வு செய்தது ஏன்? என முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மிகவும் இருட்டான அதிகாலை 1 மணிக்குச் செயற்கைக்கோள் படங்களை எடுத்து ஆதாரங்களை சேகரிப்பது மிகவும் கடினம்.
இருப்பினும் தொழுகைப் பாதிக்கப்படும், சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதிகாலை 1 மணியை தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார்.
சாதாரண குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை எனக்கூறிய அவர், எங்கள் திறன்களில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.