முதலையின் வாய் பகுதியில் முத்தமிடும், ஆபத்து நிறைந்த செயலை இளைஞர் ஒருவ அச்சமின்றிச் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எங்கு நடந்தது என்பதைத் தற்போது விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் ஆற்றில் படகில் செல்லும்போது, கருப்பு நிற பெரிய முதலையை எதிர்கொள்கிறார். அது அவரை நோக்கி அருகே வந்ததும், பயப்படாமல் அதன் வாய் பகுதியில் அந்த இளைஞர் முத்தமிடுவது போன்று வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், அதனை வருடி கொடுத்தும், சாப்பிடுவதற்கு உணவினையும் வழங்கினார். தொடர்ந்து, அதன் வாய் மற்றும் உடல் பகுதிகளைத் தொட்டு பார்த்தார். ஆபத்து நிறைந்த இந்தச் செயலை அச்சமின்றி அவர் செய்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஆபத்தான இந்தச் செயலை யாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம் என இயற்கை வாழ் உயிரினங்களின் ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.