கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஆயிரத்து 290 கன அடி வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து ஆயிரம் கன அடியில் இருந்து ஆயிரத்து 290 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மழைக்காலங்களில் நுரை அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது நுரையின் அளவு குறைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் ஆறுதலை ஏற்ப்படுத்தியுள்ளது.