சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை ஒட்டி மகாராஷ்டிராவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
கடற்கரைகளில் உள்ள குப்பைகளை அகற்றி, கடல் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
இதையொட்டி மும்பையில் உள்ள வெர்சோவா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை திரளானோர் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.