சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் கையெழுத்திடப்பட்டாலும், 1960 ஆம் ஆண்டில் இருந்த உலகம் இன்றைய உலகம் அல்ல” என்று இந்திய தூதர் அனுபமா சிங் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த விவகாரத்தை ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்திய தக்கப் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தப் பிரச்னையை எழுப்புவதன் மூலம் சபையில் அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டியது.
மேலும், இந்தக் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியான மற்றும் வேண்டுமென்றே முயற்சிப்பது” குறித்து இந்தியா ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகவும் கூறினார். மேலும், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் தனது ஆதரவை நிறுத்தும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க இந்தியா முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.