நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி, தாலிச் செயினை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கொற்கை மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண்ணான சங்கீதா. திருமணமான இவர் வாழவல்லான் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் இந்தக் கடைக்கு வந்த இருவர்ப் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து, பின் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி, சங்கீதாவின் இரண்டரை சவரன் தாலி செயினைப் பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாகச் சங்கீதா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஏரல் போலீசார், செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண், இளஞ்சிறார் உட்பட 7 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.