கன்னியாகுமரியில் சாலையோர வியாபாரம் செய்யும் வடமாநில வியாபாரிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சுற்றுலா தலத்தில் சாலையோரமாகக் கடைகள் அமைத்தும், இருசக்கர வாகனங்கள் மீது பொருட்களை வைத்தும் வடமாநில வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றியபடி வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வடமாநில வியாபாரிகளை ஒருமையில் பேசியும், கடையை காலி செய்யுமாறும் வற்புறுத்தினர்.
மேலும், வியாபாரப் பொருட்களை சேதப்படுத்தி சென்ற தவாக-வினர் அவர்களைத் தாக்கவும் முயன்றனர். தவாகவினரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.