உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இத்தாலியன் கார்டன் பகுதியில் உள்ள புல்வெளி மைதானத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று உணவை தேடி அங்கும் இங்குமாக அலைந்தது.
இதனை அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கரடி சுற்றித்திரிவது ஆபத்தானது எனவும் கரடியைக் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.