ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடலின் அழகை ரசிப்பதற்காக வரதராஜன் என்ற பயணி ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்.
பாம்பன் பாலத்தில் ரயில் வந்தபோது, அவர் திடீரென தவறி கடலில் விழுந்தார். உடனடியாக நீந்தி அருகில் உள்ள பாறையில் அவர் ஏறினார்.
இரவு நேரம் என்பதால், வரதராஜன் கடலின் நடுவே உள்ள பாறையில் விடிய விடிய அமர்ந்து கொண்டிருந்தார். அதிகாலையில் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், வரதராஜனை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அவரை பத்திரமாக மீட்ட மீனவர்கள், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.