எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டினருக்கான எச்1-பி விசா வருடாந்திர விண்ணப்ப கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்களால் அமெரிக்க பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அமெரிக்க தொழிலாளர்களை முதலிடத்தில் வைத்திருக்க விசா கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்பை மீண்டும் கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர்களை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்ற உறுதிமொழிக்காக ஒவ்வொரு நாளும் அதிபர் டிரம்ப் உழைத்து வருவதாகவும், அமெரிக்காவில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வர்த்தகர்களுடன் அதிபர் டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் அனைத்து வேலைவாய்ப்புகளும் அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கே சென்று சேருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.