மொழியால் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது நாட்டில் 10% மக்கள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுகின்றனர் என்றும், மீதமுள்ளவர்கள் தாய், பிராந்திய மொழியிலேயே பேசுவதாகவும் தெரிவித்தார்.
குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் என்றும், ஒடியா மொழியை நேசிப்பதை போல, மற்ற மொழிகளையும் மதிக்கிறேன் என்றும் அவர் கூறினார். மொழியால் பிரிவினை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள் என்றும், மொழி பிரிவினையை தாண்டி சமூகம் வளர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினர்.