சவுதி அரேபியாவில் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
பாலைவன நாடான சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகரும், மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணமுமான மக்காவின் தைஃப் பகுதியில் தொடர் கனமழை பெய்தது.
இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
வெனிசுலா நாட்டில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
தென்அமெரிக்க நாடான வெனிசுலா தலைநகரில் உள்ள துறைமுக நகரான கேட்டியாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது.
இதில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதனை உரிமையாளர்கள் போராடி மீட்டனர்.