ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி உத்தரப்பிரதேசத்தில் கங்கா ஆரத்தி மேற்கொள்ளப்பட்டது.
துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதில் இந்தியா வெற்றி பெற வேண்டி பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசியில் ரசிகர்கள் சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கங்கா ஆரத்தி காண்பித்தும், தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.