சமூக வலைதளங்களில் நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்கள், சில யூ-டியூபர்கள் நடிகர்களை விமர்சித்து பணம் சம்பாதிக்கின்றனர் என்றும், யூ-டியூபர்களின் அறிவுப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
நடிகர் சங்க கட்டடத்திற்கு அதிகம் செலவு செய்தால்தான், அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றும், யார் வழக்கு போட்டாலும் கவலையில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது மோகன்லாலுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறினர்.