ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் : நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து!
Sep 22, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் : நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 06:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருப்பதாகவும் அறிவித்தார்.. அதன்படி அண்மையில் டெல்லியில் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி விதிப்பு 2 அடுக்குகளாக குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறினார். வருமான வரிச் சலுகை மூலம் முதல் பரிசும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாவதால், இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குவதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் 99 சதவிகித பொருட்களின் விலை குறைவதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தில் இருந்து சிக்கல்கள் களையப்பட்டிருப்பதால், அதன் பலனை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கும் சலுகைகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார். சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை நாட்டு மக்கள் கர்வத்தோடு வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டில் சர்வதேச தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

 

Tags: gst impact on pricesgst updates 2025gst implementationgstigst tax changesgtsgst exemptionsgst on healthcaregst policy updatespm modi speech on gstgst analysisGST tax cut.gst on essential goodsGST benefitsgst compliancegst tax reductionnirmala sitharaman gstgst reform 2025gst simplificationgst savingsgst for small businesses
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமல் – விலை குறைந்த பொருட்களின் பட்டியல்!

Next Post

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – 40 % வரி விதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்!

Related News

உந்தன் தேசத்தின் குரல்…. தாயகம் திரும்ப இதுவே சரியான நேரம் – ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் – இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஒப்புதல்!

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ராம்நாத் கோவிந்த்

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம் – அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரமோற்சவ விழா – சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருக்குடைகள் ஊர்வலம்!

ஆசிய கோப்பை டி- 20 கிரிக்கெட் தொடர் – இந்தியாவிடம் சரண்டர் ஆன பாகிஸ்தான்!

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை – இன்று அமெரிக்கா செல்கிறது பியூஷ் கோயல் தலைமையிலான குழு!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – 40 % வரி விதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்!

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் : நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமல் – விலை குறைந்த பொருட்களின் பட்டியல்!

பிரதமரின் தீபாவளி பரிசு – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்!

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies