ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி வீழ்த்தியது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 2வது சூப்பர்-4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் குவித்தனர். திலக் வர்மா 30 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 18.5 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
முன்னதாக, பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் வீரர் சாஹிப்சாதா பர்ஹான் 50 ரன்களை கடந்தார். அதனை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் பேட்டை துப்பாக்கி போல் பாவித்து, செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ரசிகர்கள், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அணி வெற்றிப்பெற்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இந்திய அணியை பாராட்டி முழக்கங்கள் இட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,