திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சென்னையில் திருக்குடை சேவா சமிதி என்ற டிரஸ்டை நிர்வகித்து வருகிறது. இந்த டிரஸ்ட் மூலம் திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ம் தேதி பிரமோற்சவம் தொடங்குகிறது. இதனால் சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலமாக புறப்பட்டன.
இந்த ஊர்வலத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருக்குடை சேவா சமிதி டிரஸ்டிகள், ஊர்வலமாக கொண்டு சென்று தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.