இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், உலக அரங்கில் நமது மதிப்பு உயர்ந்து வருவதாகவும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் 12வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், குடிமை பணி அதிகாரிகள் வெறும் பணியாளர்களாக மட்டும் இருக்காமல், நாட்டை வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.
உலகம் வேகமாக மாறி வருவதாக குறிப்பிட்ட ராம்நாத் கோவிந்த், நம்மை வழிநடத்தும் ஒளியாக தமிழ் ஞானம் உள்ளதாக கூறினார். மேலும், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதுடன், உலக அரங்கில் நம் மீதான மதிப்பும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.