திமுக அரசின் சமூக நீதி விடுதிகளில் மதமாற்றமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nov 7, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் சமூக நீதி விடுதிகளில் மதமாற்றமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றம் நடைபெறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும்  லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

அவ்விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோரே இதுகுறித்த புகார் கடிதத்தினைத் தமிழக முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு திட்டத்திற்கும் கவர்ச்சிகரமாகப் பெயர் சூட்டுவதில் அதீத அக்கறை காட்டும் அறிவாலய அரசு, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது என்பதற்கான மற்றொரு சான்று இது என்றும் அவர் கூறியுள்ளார்.

முறையான அடிப்படை வசதிகள் மற்றும் தகுதியான ஊழியர்களை மேம்படுத்தாமல், வெறும் கட்டடங்களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்பதால் யாருக்கு என்ன பயன்? அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றனவே, இதுதான் திமுகவின் சமூகநீதியா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? மற்ற மதங்களைப் பாதுகாத்து இந்துமதத்தைத் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக ஆட்சியில், இந்துக்களை மதமாற்றம் செய்தால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா? அல்லது திமுகவே இதுபோன்ற மதமாற்றவாதிகளுக்குப் படியளந்து இந்துமதத்தை அழிக்க முயற்சிக்கிறதா?

அதிலும் மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது கோரத்தின் உச்சமல்லவா? சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது.

எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருமதி. லட்சுமி என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் பிற அரசு மாணவர் விடுதிகளையும் தனது நேரடிக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உந்தன் தேசத்தின் குரல்…. தாயகம் திரும்ப இதுவே சரியான நேரம் – ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies