நவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபத்தில் முதல் முறையாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி துவக்கத்தை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
வழக்கமாக கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்களின வசதிக்காக வசந்த மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கொலுவில் அறுபடை முருகன் வீடு, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், அஷ்ட லட்சுமிகள் பொம்மைகள், கல்விக்கூடம், திருமண கோலம், ஆண்டாள் திருக்கல்யாணம், காஞ்சி பெரியவர்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வீரர்களின் பொம்மைகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. ‘
இந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.