மஹாளய அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை தாலாட்டு பாடிய படி ஊஞ்சலில் அமரவைத்து உற்சவம் நடைபெற்றது. அப்போது கையில் தீபத்தை ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.