இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போர் விமானங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர்களை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் 21 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பென்டகன் என்றழைக்கப்படும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டிரம்ப் அரசுக்கு எதிராகவும், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.