நியூ திரைப்படம் 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் ‘நியூ’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகச் சிம்ரன் நடித்திருந்தார்.
இந்தப் படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். இந்நிலையில் நியூ படம் தரம் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் முறையில் 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.