ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
அண்மையில் டெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது.
இனி 5 சதவீதம், 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி சீர்திருத்தத்தால், சுமார் 353 பொருட்களின் விலை குறையவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.