ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்பனைச் செய்யப்படும் ‘ரயில் நீா்’ விலை 1 ரூபாய் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் ஐஆா்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ ஒரு லிட்டா் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை 15 ரூபாயில் இருந்து 14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் விலை 10 ரூபாயில் இருந்து 9-ரூபாயாகவும் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ரயில் நீர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.