சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியது.
அப்போது, மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். 12 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில், தினந்தோறும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
கோயில் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கொளு பொம்மைகளை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.