வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கு 30ம் தேதிக்குள் தயாராக இருக்கும்படி, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் பீகாரில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன் மூலம் மொத்தம் உள்ள 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களில், 65 லட்சம் வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியது.
இதேபோன்ற சீர்திருத்தத்தை நாடு முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கு 30ம் தேதிக்குள் அனைவரும் தயாராக இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் கடைசியாக நடைபெற்ற திருத்தப்பணிக்குப் பிறகான வாக்காளர்ப் பட்டியலை தயாராக வைக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.