சீனாவின் தன்னாட்சி பகுதியான ஹாங்காங்கில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான குடிசைப் பகுதிகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதியான ஹாங்காங்கில் உள்ள சாக்வோ லிங் பகுதியில் குடிசைவாழ் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிசையில்லா ஹாங்காங் பகுதியாக உருவாக்கும் முயற்சியில் அம்மாகாண நிர்வாகம் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாகாணத்தில் உள்ள குடிசைப்பகுதிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஹாங்காங்கில் எஞ்சியுள்ள குடிசைப் பகுதியான சாக்வோ பகுதியில் உள்ள தகரம் மற்றும் குடிசை வீடுகளை அகற்றும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.