பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் உடலுக்கு, திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வயது மூப்பு காரணமாகக் கீதா ராதா இயற்கை எய்தினார். அவருடைய உடல் போயஸ்கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் நாசர், பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கீதா ராதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் கீதா ராதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.