திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரியின் முதல் நாளான நேற்று, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கும் நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது.
குறிப்பாக ஒரு வீட்டில் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொலு வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொலுவில், வந்தே பாரத் ரயில் திட்டம், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த நிகழ்வு, கண்ணாடி பாலம் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.