பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் 75 தம்பதிகளுக்குச் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் 75 தம்பதிகளுக்குச் சிறப்பு பூஜைச் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் சுரேந்திர பாபு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 75 தம்பதிகளுக்குப் பாத பூஜைச் செய்யப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் ஜிஎஸ்டி வரி குறித்து சிலர் தவறான தகவலைத் தெரிவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.