டென்மார் தலைநகர் கோபன்ஹேகனில் டிரோன்கள் தென்பட்டதை அடுத்து மூடப்பட்ட வான்வெளி, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
கோபன்ஹேகனில் நேற்று மூன்று டிரோன்கள் தென்பட்டதாகப் போலீசார் தெரிவித்ததை அடுத்து அந்நாட்டு அரசு வான்வெளியை மூடியது.
இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சுமார் 50 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோபன்ஹேகனில் சட்டவிரோதமாக ஆளில்லா டிரோன்கள் பறந்தது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது.
இருப்பினும், விமானங்களை முன்பதிவு செய்துள்ள பயணிகள், விமான சேவைக் குறித்து விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.