விருதுநகரில் நெடுஞ்சாலையில் நடப்பட்ட திமுகவின் கொடி கம்பங்கள் காற்றில் சரிந்து விழுவதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல உள்ளார்.
இதையொட்டி விருதுநகரில் இருந்து சாத்தூர் வரை சாலை நெடுகிலும் திமுகவின் கொடி கம்பங்கள் நடப்பட்டன.
இந்தக் கொடி கம்பங்கள் பல காற்றில் விழுவதால் அதனை முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.