இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் சுமார் நான்கரை மணி நேரம் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செப்டம்பர் மாதத்தில் சில வாரங்களுக்கு முன் சந்திரகிரகணம் நிகழ்ந்தது. அதேப்போல் இதே மாதத்தில் சூரிய கிரகணமும் நிகழ்ந்தது.
இது முழு சூரிய கிரகணமாக அல்லாமல், பகுதி கிரகணமாகவே தென்பட்டது. அதுவும் பசுபிக் தீவுகள், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டனர்.